யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், செயல்பாடுகளைப் பார்த்து விமர்சிப்போம் ! தமிழிசை பேட்டி

Share this Video

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, நாட்டில் யார் வேண்டுமானாலும் புதிய அரசியல் கட்சி தொடங்குவதற்கு முழு உரிமை உண்டு என்று குறிப்பிட்ட அவர், திரைத்துறையில் இருப்பவர்கள் உட்பட பலரும் அரசியலுக்கு வர ஆர்வம் காட்டி ஓடி வருவதாகத் தெரிவித்தார். புதிய கட்சிகளின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்தே விமர்சிக்க முடியும் என்று கூறிய அவர், தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

Related Video