
விலைவாசி உயர்வு குறித்து முதல்வர் பேசாதது ஏன்? - மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை சரமாரி கேள்வி!
மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் கே. அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் முன்வைத்த கருத்துகள்: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பை மாநில அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்த பிறகும், மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மறுசீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய நினைப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்றும், அரசு நடுநிலையோடு செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.