
தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்..! முக்கிய அறிவிப்புகள்
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களுடன் இணைந்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். இந்தச் சந்திப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், வேளாண் கொள்கைகள், காவிரி நீர் மேலாண்மை, பயிர்களுக்கு நியாயமான விலை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக கருத்துகளைப் பகிர்ந்தார். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாய நலனைப் பாதுகாக்க அனைத்து விவசாயிகள் சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். இந்த செய்தியாளர் சந்திப்பின் இரண்டாம் பகுதியில் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.