
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு விருந்து: குழந்தைகள் தின வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்த ஆனந்த்!
நவம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழக அமைச்சருமான என். ஆனந்த் சென்னை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து முன்னதாகவே குழந்தைகள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினார். இந்நிகழ்வில் பங்கேற்ற அவர், பள்ளிக்குழந்தைகளுக்குக் கேக் வெட்டி ஊட்டிவிட்டதுடன், இனிப்புகள் மற்றும் சாக்லேட்டுகளை வழங்கித் தனது குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அமைச்சரின் இந்த அன்பான அணுகுமுறையால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.