
தண்ணீரால் நிறைந்த ஆலத்துடையான்பட்டி குளம்": ட்ரோன் கேமராவில் படமாக்கப்பட்ட வண்ணமயமான காட்சிகள்!
திருச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆலத்துடையான்பட்டி பெரிய குளம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இக்குளம் நிரம்பியதன் மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அடைந்துள்ளனர். நிரம்பி வழியும் ஆலத்துடையான்பட்டி குளத்தின் கொள்ளை அழகைக் காட்டும் ட்ரோன் (Drone) காட்சிகள் வெளியாகியுள்ளன.