
ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதியில், தமிழக வெற்றிக் கழக (TVK) சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ எம்.வி. கருப்பையா ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அஇஅதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை அவமதிக்கும் வகையில் எம்.எல்.ஏ பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராகவும் தவெக அரசைக் கண்டித்தும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினர்.