
காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
திருச்சிராப்பள்ளியில், அதிமுக சார்பில் விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி நீர் பங்கீடு மற்றும் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது அரசின் மெத்தனப்போக்கைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், ஆர்.காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.