
ஒரே தொழிலை தொடர்ந்து செய்யுங்கள்: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ஆதவ் அர்ஜுனா பேச்சு !
சென்னை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி உரையாற்றினார். தனது உரையில், தொழில்முனைவோர்கள் அடிக்கடி தொழிலை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஒரே தொழிலை தொடர்ந்து 2-3 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செய்யும்போது தான் அதில் பெரிய அளவில் லாபமும் வெற்றியும் கிடைக்கும் என்றும் அறிவுறுத்தினார். இதற்கு உதாரணமாக, "30 ஆண்டுகளாக ஒரே துறையில் டெடிகேட்டாக உழைத்ததால் தான் மக்கள் இன்று விஜய் அண்ணனை இந்த உயரிய இடத்திற்குக் கொண்டு வந்து வைத்துள்ளனர்" எனக் குறிப்பிட்டு, வெற்றிக்கான தாரக மந்திரமாக விடாமுயற்சியையும் தொடர் உழைப்பையும் வலியுறுத்திப் பேசினார்.