
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹3000 கோடி கடன் உதவி: மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி !
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்காக ₹3,000 கோடி அளவுக்கு கடன் உதவிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 10 முதல் 15 ஆண்டுகளில் இடைத்தரகர்களால் சுயஉதவிக் குழு நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்த நிலையில், அவற்றைச் சீரமைத்து குழுக்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 14,000 பயனாளிகளுக்கு ₹120 கோடிக்கும் அதிகமான நிதியுதவி வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.