நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !

Share this Video

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 21 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்: அதிர்ச்சி அனுபவம்: வெள்ளத்தில் இவர்களுக்கு முன்னால் சென்ற இரு பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்டு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக தப்பிய இந்த 21 பயணிகள், ஒரு பெண்மணி மரத்தில் கட்டிய சேலையைப் பிடித்து கீழே இறங்கித் தப்பியுள்ளனர். உடனடி உதவி: உடமைகள் மற்றும் உணவின்றி தவித்த இவர்களை மீட்க பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக 2 விமானங்களை அனுப்பினார். ஆவணங்கள் நடவடிக்கை: பாஸ்போர்ட் மற்றும் முக்கிய ஆவணங்களை இழந்த இந்த 21 நபர்களுக்கும், புதிய ஆவணங்கள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

Related Video