விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாக திமுக வாக்காளர்களுக்கு வேட்டி, சேலைகளை விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பாமக வுக்கு அளிக்கும் வாக்கு பாஜக.விற்கு அளிக்கும் வாக்கு, சாதிக்கும், மதவாதத்திற்கு அளிக்கும் வாக்காகும் என விக்கிரவாண்டியில் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் என்றாலே மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு உரிமை உண்டு. அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 5 பெண்கள் உயிரிழந்த நிலையில் மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தலைமையில் இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரணத்தில் திமுக அரசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு அண்ணாமலையின் சதிச்செயல் தான் காரணம் என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டி உள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களில் 39 பேரின் உடல்கள் தகனம் மற்றும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் மனசாட்சி என்பது கொஞ்சமாவது இருந்தால் பதவி விலகுங்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மாணவி ஸ்ரீமதியின் தாயார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Villupuram News in Tamil - Get the latest news, events, and updates from Villupuram district on Asianet News Tamil. விழுப்புரம் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.