Asianet News TamilAsianet News Tamil

Kallakurichi: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணத்திற்கு பின்னால் அண்ணாமலையின் சதி? ஆர்.எஸ்.பாரதி சந்தேகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு அண்ணாமலையின் சதிச்செயல் தான் காரணம் என ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டி உள்ளார்.

RS Bharathi has accused Annamalai of being involved in the illicit liquor case in Kallakurichi vel
Author
First Published Jun 22, 2024, 10:55 PM IST | Last Updated Jun 22, 2024, 10:55 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சீரணி அரங்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பொதுக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அவர், அண்ணாமலை ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்.

அண்ணாமலையின் பேச்சுக்கும், செய்கைக்கும் தொடர்பு இல்லை. விருப்ப ஓய்வில் சென்ற எஸ்.பி. கள்ளச்சாராய நிகழ்வு தெரிந்துதான் சென்றதாக கூறுகிறார். ஆனால் அந்த எஸ்.பி.யே இன்றைக்கு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். அதெல்லாம் பொய் நான் அப்படிப் போகவில்லை. எனது மருமகளுக்கு பிரசவம் பார்ப்பதற்காக விடுப்பு எடுத்து அமெரிக்காவுக்கு சென்றேன் என்று கூறியுள்ளார். இப்படி பொய் சொல்கிற மனிதனை வைத்துக்கொண்டு அவர் எந்த காலத்தில் உண்மையை பேசி உள்ளார்.

கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது - ஆட்சியர் தகவல்

நான் கேட்கிறேன், இந்த சாவுக்கு காரணம் யார்? என்று ஆராய்ச்சிக்கு எல்லாம் நான் போக விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் டார்ஜிலிங்கில் ரயில் விபத்து ஏற்பட்டு அவ்வளவு பேர் செத்தார்கள். அப்போது மத்திய ரயில்வே மினிஸ்டர் ராஜினாமா செய்தாரா? நீட் தேர்வு  கேள்வித் தாள்கள் எல்லாம் வெளியாகி உச்சநீதிமன்றம் காரி துப்புகிறதே, பல பேர் இறந்துள்ளார்களே அங்கே மத்திய அமைச்சர் ராஜினாமா செய்தாரா?

நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது 137 பேர் சாராயம் குடித்து இறந்தார்களே, அப்போது அவர் ராஜினாமா செய்தாரா? ஆக வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது. கான்கிரீட்டாக சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னால் பாண்டிச்சேரியில் உள்ள முதலமைச்சர்தான் ராஜினாமா செய்ய வேண்டும். அங்கே இருந்து தான் சரக்கு வந்துள்ளது என்று காவல்துறை சொல்கிறது.

சுயமரியாதை திருமணத்தை ஆதரிப்பவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளுக்கு அதை செய்யுங்கள் - ரஞ்சித் ஆவேசம்

பிஜேபி யில் உள்ள அவங்க தான் பண்ணி இருக்காங்க. அண்ணாமலை உடைய சதித்திட்டம் தான் இது என்று நான் சொல்கிறேன். அவர்கள் கட்சி ஆளுகிற மாநிலத்தில் இருந்து தான் இது வந்திருக்கிறது என்று சொன்னால் விக்கிரவாண்டி தேர்தலுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. இவர் அனுப்பி தேர்தலுக்கு முன்பாக இப்படி செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டாரோ என்ற சந்தேகம் என்னைப் போன்றோருக்கு இருக்கிறது என்று பேட்டியளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios