மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்; விக்கிரவாண்டி இடைதேர்தலில் களம் காணும் ஸ்ரீமதியின் தாயார்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், மாணவி ஸ்ரீமதியின் தாயார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

vikravandi by election women candidates Selvi, the mother of Kallakurichi student Srimathi vel

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வருகின்ற 24ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 26ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். 

நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் அளிக்கிறேன் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

வாக்குபதிவு ஜூலை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று  கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் துயரங்களை சந்தித்து வருவதாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கள்ளு கடைகளை கொண்டு வரும் நேரம் இது - அண்ணாமலை கருத்து

தொடர்ந்து தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தை சார்ந்த பொதுச்செயலாளர் ஆறுமுகம் வெள்ளை புடவை அணிந்தும், கையில் கரும்பு, பனை ஓலை, மஞ்சள் தாலியை ஏந்தி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் மனு அளித்தார். ரமேஷ் என்பவர் காந்தி வேடமணிந்து கையில் அசோக சின்னத்தை எடுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உட்பட இதுவரை 40 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிவடைகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios