நான் ஓடி ஒளிபவன் அல்ல; முதல்வர் என்ற முறையில் பொறுப்புடன் பதில் அளிக்கிறேன் - சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Additional compensation to the families of those who died after drinking illicit liquor in Kallakurichi; CM Stalin's announcement vel

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டராப் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52ஐ கடந்துள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் அரசியல் கட்சியினர் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ஏற்கனவெ அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத்தோடு மேலும் சில நிவாரணங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்துவிட்டு வீட்டிலேயே துடிதுடித்த நபர்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

அதன்படி தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் உடனடியாக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த தொகை அவர்களது 18 வயது பூர்த்தியானவுடன் வட்டியுடன் சேர்த்து வங்கி மூலமாக வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியகும் வரை பராமரிப்பு தொகையாக மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் வங்கி கணக்கில் தலா 3 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு 18 வயது பூர்த்தியானவுடன் வட்டியுடன் சேர்த்து வங்கி மூலம் நிதி வழங்கப்படும். மேலும் தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் உயர் கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்கும். அவர்களின் விடுதி செலவு உட்பட அனைத்து செலவினங்களும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios