ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அவரது பெயரில் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இனி பிரதமர் மோடியை 28 பைசா பிரதமர் என்று தான் கூப்பிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து குடும்பம் வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட 5 இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், கூட்டணிக்காக பிற கட்சிகளுக்கு புறா, காக்கா, கழுதை என அனைத்தையும் தூது அனுப்பி உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
ஆளும் திமுக அரசு முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் பங்கேற்றன.
கச்சத்தீவு பகுதியில் நடைபெறும் அந்தோணியார் ஆலய திருவிழாவை இந்த ஆண்டு புறக்கணிப்பதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து கச்சத்தீவு கலை இழந்து காணப்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை அரசை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினற்னர்.
அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை திமுகவுக்குச் சாதகமாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தார் என்றே கூறலாம்.
Ramanathapuram News in Tamil - Get the latest news, events, and updates from Ramanathapuram (Ramnad) district on Asianet News Tamil. ராமநாதபுரம் (ராம்நாடு) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.