Asianet News TamilAsianet News Tamil

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத திமுக! சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பா? TTV.தினகரன் பகீர்!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

DMK government is unable to root out the movement of drugs.. TTV Dhinakaran tvk
Author
First Published Mar 6, 2024, 9:11 AM IST

மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இதையும் படிங்க: துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்.. இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!

DMK government is unable to root out the movement of drugs.. TTV Dhinakaran tvk

மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை இரயில் நிலையம், சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:  இபிஎஸ் மீதுள்ள கோபத்தில் ஸ்டாலினை வெற்றிபெற செய்தீர்கள்.. இப்போ பாத்தீங்களா என்ன ஆச்சு.. டிடிவி.தினகரன்.!

DMK government is unable to root out the movement of drugs.. TTV Dhinakaran tvk

எனவே, வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என டிடிவி.தினகரன் பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios