Asianet News TamilAsianet News Tamil

“இனி பிரதமர் மோடியை 28 பைசா பிரதமர் என்று தான் கூப்பிட வேண்டும்..” உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

இனி பிரதமர் மோடியை 28 பைசா பிரதமர் என்று தான் கூப்பிட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Loksabha elections 2024 We should call Narendra Modi '28 paisa PM says Udhayanidhi Stalin Rya
Author
First Published Mar 24, 2024, 11:01 AM IST

தமிழ்நாட்டில் வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான அரசியல் தலைவர்கள் தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம், தேனியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.  

பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருவதாக கூறிய பிரதமருக்கு உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாம் புயல், தூத்துக்குடி வெள்ளத்தின் போது ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய உதயநிதி “ தேர்தல் வந்திருப்பதால் மட்டுமே பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருக்கிறார். உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் மிக்ஜாய் புயலின் போது வந்திருக்க வேண்டும். அதே போல் தூத்துக்குடி, திருநெல்வேயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்தது. யாராவது வந்து எட்டி பார்த்தார்களா” என்று கேள்வி எழுப்பினார்.

குருவை எதிர்கொள்ளும் சிஷ்யன்.! டிடிவி தினகரனா.? தங்க தமிழ்செல்வனா.? தேனி களத்தில் வெற்றிப்பெறப்போவது யார்.?

மேலும் “ பாஜக அரசு எல்லா உரிமைகளை பறிக்க பார்க்கின்றனர். புதிய கல்விக்கொள்கை மூலம் தமிழை அழித்துவிட்டு சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை திணிக்க பார்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கை வந்துவிட்டால் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத வேண்டும். அதே போல் நிதி உரிமை. நாம் 37,000 கோடி கேட்டிருந்தோம். ஒரு பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. 

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ள வரிப்பணம் ஆறரை லட்சம் கோடி. ஆனா தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கொடுத்தது வெறும் ஒன்றரை லட்சம் கோடி. அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 1 ரூபாய் கொடுத்தால் அவர்கள் வெறும் 28 பைசா மட்டுமே திருப்பி தருகின்றனர். இனிமே நரேந்திர மோடி அவர்களின் பெயரை நான் சொல்ல மாட்டேன்.. இனி பிரதமர் மோடியை திரு.28 பைசா என்று தான் கூப்பிட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

காங்கிரசை ஆட்சியில் அமர வைத்த மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில்.! திருவள்ளூரில் எம்பி பதவியை தட்டிப்பறிப்பாரா.?

தொடர்ந்து பேசிய அவர் “ நாடு முழுவதும் நீட் தேர்வு அமலுக்கு வந்தாலும், தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் தேர்வு நுழையவில்லை. ஆனால் அவர் இறந்த பிறகு இந்த அதிமுக அடிமைகள் பாஜகவின் பேச்சை நீட் தேர்வை கொண்டு வந்தனர். அரியலூரி அனிதா தொடங்கி கடந்த ஆண்டு சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவன் வரை 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த முறை இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios