- Home
- குற்றம்
- ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
ஸ்கூலுக்கு போன பள்ளி மாணவி ஷாலினி! வழிமறித்த இளைஞர்! பட்டப்பகலில் நடுரோட்டில் பயங்கரம்! அதிர்ச்சி போட்டோ!
ராமேஸ்வரம் அருகே ஒருதலைக் காதலால் 12ம் வகுப்பு மாணவி ஷாலினியை, முனிராஜ் என்ற வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து, தனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது எனக் கூறி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன். இவரது மகள் ஷாலினி (17). இவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு தோழியுடன் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் முனிராஜ் (21) ஒரு தலைபட்சமாக மாணவி ஷாலினியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் பள்ளி மாணவி ஷாலினி மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்த முனிராஜ் எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் இடக்ககூடாது என கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கிய மாணவியை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவி ஷாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்த இளைஞர் முனிராஜை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்வதற்காக மாணவியை கொலையாளி முனியராஜ் பின்தொடர்ந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

