கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர காவல் துறையினரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் திடீரென புகுந்த திமுக பிரமுகரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தக்காளி விலை தொடர் உயர்வால் தோட்டங்களில் தற்போது தக்காளி திருட்டை தடுக்க தோட்டங்களை சுற்றி வேலி அமைத்தும், தடுப்பு கோணி பை விரிப்பு (கிரீன் மெஷ் )அமைத்தும் விவசாயிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
ஓசூர் அருகே மகளின் காதலனை அடித்து கொன்ற வழக்கில் தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகிய 3 பேருக்கு ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தனியார் கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணுக்கு அதிப்படியான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டதால் கரு கலைந்ததாகக் கூறி கருத்தரித்தல் மையத்திற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனிமவளக்கொள்ளையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விரைவில் கைது செய்யப்படலாம் என பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, பெண்களின் உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி, இரும்புக் கம்பியால் கொடூரமாக குத்தி கொடுமைப்படுத்தி இருப்பது அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
ஆயிரம் கோடி ரூபாய் கனிமவள கடத்தலின் பின்னணியில் நான் இருப்பதாக செய்தி வெளியிட்ட பிரபல தனியார் பத்திரிகை தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக எம்எல்ஏ பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு விநாடிக்கு 750கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது. ஆற்றில் கலக்கும் ஆலைக் கழிவுகளால் பனிகட்டிகள் போல மிதக்கும் ரசாயன நுரை காணப்படுகிறது.
Krishnagiri News in Tamil - Get the latest news, events, and updates from Krishnagiri district on Asianet News Tamil. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.