ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு; கணக்கில் வராத ரூ.5 லட்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை லாபமீட்டும் துறையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தினந்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நிலம் வாங்கியும், விற்றும் வருவதால் ரியல் எஸ்டெட் பணிகள் கொடி பட்டி பறக்கிறது. தமிழகத்தின் மாநில எல்லையாகவும், 2 மிகப்பெரிய தொழிற்பேட்டைகளான சிப்காட் அமைந்த நகரமாக ஓசூர் மாநகராட்சி விளங்குகிறது.
தினந்தோறும் தொழில் வளர்ச்சியில் புதிய உச்சத்தையும், வளர்ந்த நகரங்களில் ஆசியாவிலேயே 4வது இடத்திலும் உள்ள ஒசூரில் தினந்தோறும் நிலத்தின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தினந்தோறும் ஒசூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் தடையின்றி பத்திர பதிவு நடைப்பெற்று வருகிறது.
காவல் நிலையத்தில் 68 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் இடை நீக்கம்
இந்நிலையில், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்று பல்வேறு பணிகள் நடைப்பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட இலஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வடிவேல் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டதில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத 5 லட்சத்து 4850 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அல்லேரியில் பாம்பு கடியால் தொடரும் அவலம்; சிறுமியை தொடர்ந்து மேலும் ஒருவர் பலி
இதனைத் தொடர்ந்து பொறுப்பு சப் ரிஜிஸ்டர் சகிலா பேகம் மற்றும் தரகரிடம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளனர்.