- Home
- Tamil Nadu News
- கிருஷ்ணகிரி
- 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..! இயேசு மீது சத்தியம் அடித்தார் சீமான்
234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி..! இயேசு மீது சத்தியம் அடித்தார் சீமான்
எந்த காலத்திலும் திராவிட, இந்திய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என இயேசு மேல் ஆணையாகக் கூறிய சீமான், 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம் என உறுதியளித்தார்.

பன்னாட்டு தமிழ் கிருத்துவ பேராயம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பாக, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளிக்கும் வகையிலான "உரையாடல் அமர்வு" நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமானிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு சீமான் பதில் அளித்தார். சிற்றூர் தோறும் நாம் தமிழர் கட்சி தன் கிளையை பரப்புகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாம் புகழ்பெற்ற நடிகராக இருந்தால் எல்லா ஊர்களிலும் ரசிகர்கள் இருப்பார்கள். ரசிகர்களை தொண்டர்களாக்கி கொண்டு உடனடியாக கட்டமைப்பை உருவாக்குவது எளிது.
எல்லா கட்சிகளுக்கும் வாக்குகள் விழாத வாக்குசாவடிகள் உண்டு. ஆனால் நாம் தமிழருக்கு வாக்கு விழாத வாக்குசாவடிகளே இல்லை. Tvk vs dmk போட்டி என்று தம்பி விஜய் சொல்கிறார். ஆனால் விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இவர்கள் யாரும் நிற்கவில்லை. ய=அங்கே உண்மையான போட்டி NTK vs DMK என தெரிவித்தார்.
பாஜக உடன் தேர்தல் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில அளித்த சீமான், அப்படி வைப்பது என்றால் 15 ஆண்டுகளில் எவ்வளவு அழுத்தம், எவ்வளவு நெருக்கடி வந்திருக்கும். வைத்திருக்க மாட்டேனா? 1/2 விழுக்காடு, 1/4 விழுக்காடு வாக்குகள் எடுத்துள்ள கட்சிகளுடன் பாஜக பேசும் போது,
8.5 விழுக்காடு பெற்ற என்னை பேசியிருப்பார்களா? பேசியிருக்க மாட்டார்களா? நாம் தமிழர். எந்த காலத்திலும் இந்திய கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம். இப்போதும் தனித்து நிற்போம். 2026 தேர்தலிலும் தனித்து நிற்போம். தனித்துவத்தோடு நிற்போம். இறைவன் இயேசு மேல் ஆணையாக எவரோடும் கூட்டணி கிடையாது. 234 தொகுதியிலும் தொடர்ச்சியாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான்.
திமுக, அதிமுக, பாஜக, தவெக கட்சிகளை எதிர்த்து பேசுகிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் மறைமுக கூட்டணி இருக்கிறதா? திமுகவை எதிர்த்தீர்கள் என்றால் பாஜக காசு கொடுக்கிறது. ஆர்எஸ்எஸ் கைக்கூலி. ஆர்எஸ்எஸ் பாஜகவை எதிர்த்தால், இஸ்லாமிய கிறிஸ்தவ கைக்கூலி.
அதிமுகவை எதிர்த்தால் திமுக B டீம் தம்பி விஜயை நாம் எதிர்க்கவில்லை. திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்த்தோம். விஜயை எதிர்க்கவில்லை. கேள்வியை எழுப்புகிறோம். அதற்கே விமர்சனம் என்று சொல்கிறார்கள். அவரை எதிர்த்தால் திமுக B டீம், திமுக காசு கொடுக்கிறது என்று சொல்கிறார்கள்.
நாம் நினைத்திருந்தால் எப்போதோ யாருடனோ கூட்டணி வைத்து பதவிகளை பெற்றிருக்க முடியும். பாஜக தனியாக நிற்கட்டும். நானும் தனியாக நிற்கிறேன். என்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கட்டும் பார்க்கலாம்.. திமுகவும் என்னோடு நிற்கட்டும். போட்டியிடட்டும். ஆனால் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியுமா?
காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் 1 புள்ளி மாறுதல். கட்சி கொடியில் வண்ணம் மாறும். ஆனால் எண்ணம் மாறாது. பாஜக தீவிர இந்துத்துவா. இவர்கள் இந்துத்துவா. பாஜக பாபர் மசூதி இடிக்கிறார்கள். அவர்கள் ராமர் கோயில் கட்டுகிறார்கள். இவர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்.