பாஜகவை கழட்டி விட்டு விடுவார் எடப்பாடி.! நம்பிக்கை துரோகி- போட்டு தாக்கும் டிடிவி தினகரன்
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர, எடப்பாடி பழனிசாமி பாஜகவை கழட்டிவிடவும் தயங்கமாட்டார் என்றும், இந்த பலவீனமான கூட்டணி 15% வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ளது. இதனையடுத்து தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறது.
பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக தவெகவையும் தங்கள் அணியில் இணைக்க காய் நகர்த்தி வருகிறார். அதற்கு ஏற்றார் போல எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ள கூட்டங்களில் தவெக தொண்டர்கள் தவெக கொடியுடன் பங்கேற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி வெளியே வந்த பிறகு எஸ்டிபிஐ கூட்டத்தில் என்னவெல்லாம் பேசினார். பாஜகவிற்கும் மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினார். இன்றைக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என கேட்கிறார். அதைத்தான் எல்லோரும் விமர்சனம் செய்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணியில் இருந்து வெளியே வந்தீர்களே அதற்கு காரணம் என்ன.?
அந்த தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தல். பாஜகவிற்கு நன்றியாக இருப்பேன் என தற்போது எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். அதிமுகவின் நான்கரை ஆண்டு கால ஆட்சி காப்பாற்றி கொடுத்தது பாஜக என கூறும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முக்கியமான தேர்தல், மீண்டும் மோடி பிரதமராக வரவேண்டும் என்ற தேர்தல், பாஜகவால் பல லாபங்களை அனுபவித்த எடப்பாடி பழனிச்சாமி எதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
பாஜகவுக்கு முக்கியமான தேர்தல் என்ற நேரத்தில் ஏன் அப்போது வெளியே ஓடிவந்தீர்கள். இப்போதும் சொல்கிறேன் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தன்மையற்றவர், துரோகத்தை தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜகவை கழட்டி விட கூட செய்வார். ஆனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவாரா என்பது தெரியவில்லை. விஜய் அவர் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும், அவர் முதலமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அவர் கட்சி தொண்டர்களின் எண்ணம்.
திரைத்துறையில் பல கோடி வருமானங்களை பெற்று வந்தவர் கட்சியா ஆரம்பிக்கிறார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்குவதற்காக.? இதனை தவெக தொண்ர்கள் ஏற்றுக்கொள்வார்களா.? நடக்காத ஒன்றை தொண்டர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாபி இப்படி செய்து வருகிறார்கள்.
அதிமுக கூட்டணி பலவிணமாகிக்கொண்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி முன்னிலைப்படுத்தி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் போதே அந்த கூட்டணி பலவீனமாகிவிட்டது. வரும் நாட்களிலும் அதிமுக பாஜக கூட்டணி இன்னும் பலவீனமாகி தான் வரும். தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள கூட்டணி 15% வாக்குகளை மட்டுமே பெறும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.