Asianet News TamilAsianet News Tamil

Watch : ஓசூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஓசூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

Kumbabhishekam for 400 years old Murugan temple near Hosur!
Author
First Published Jun 8, 2023, 10:51 AM IST

ஓசூர் அருகே 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகரம் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அகரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு பெற்றது. இந்த கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்குபின் இன்று ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தலைமை குரு மணி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் கலந்து கொண்டு யாக பூஜைகளை நடத்தினர்.

கடந்த 4 ஆம் தேதி முதல் விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாரதனை ஆகியவை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாட்களாக முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து இன்று கலச புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் முருகனைக் கண்டு வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios