Vira Video : தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஆலைக் கழிவுகள்- ஆற்றில் பனிக்கட்டி போல் மிதக்கும் ரசாயன நுரை!
தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு விநாடிக்கு 750கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது. ஆற்றில் கலக்கும் ஆலைக் கழிவுகளால் பனிகட்டிகள் போல மிதக்கும் ரசாயன நுரை காணப்படுகிறது.

கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆறு உற்ப்பதியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 750கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது.
கெலவரப்பள்ளி அணையின் முழுக்கொள்ளளவான 44.28அடிகளில் 41.66அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 519 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று விநாடிக்கு 750 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேலும், தென்பெண்ணை ஆற்றில் ஆலைக் கழிவுகள் அதிகமாக கலப்பதால் ஆற்றில் அதிகப்படியான நுரை பனிக்கட்டிகளை போல மிதந்து செல்கிறது. காற்றில் பறக்கும் நுரையால் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது.