கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் புகுந்த திமுக பிரமுகருக்கு தர்ம அடி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர காவல் துறையினரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் திடீரென புகுந்த திமுக பிரமுகரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள புளியண்டபட்டி கிராமத்தில் குறவன் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஐயப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆந்திர மாநில காவல் துறையினர் ஐய்யப்பன், அவரது தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர் அருணா, 7 வயது குழந்தை ஸ்ரீதர் உட்பட நான்கு நபர்களை கடந்த ஜூன் 11ம் தேதி சித்தூர் காவல் துறையினர் விசாரணைக்காக சிவில் உடையில் அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஐயப்பனின் சகோதரி சத்யா என்பவர் ஆன்லைனில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதனால் ஆத்திர மாநில காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இரவு 15 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை சேதப்படுத்தி சத்யா, ரமேஷ், ரேணுகா, அருணா, பூமதி மற்றும் ராகுல் என்ற ஆறு வயது குழந்தை உட்பட ஆறு பேரை அழைத்துச் சென்றுள்ளனர்.
சேமிப்பு பணத்தை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; சோகத்தில் கணவன் விபரீத முடிவு
இவர்களை ஆந்திரா காவல் துறையினர் சாதி குறித்து பேசியதாகவும், மேலும் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியினை தூவி சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களை மீட்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும் கடந்த 16ஆம் தேதி இரவு மத்தூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு குறவர் சங்கம் மாநிலத் தலைவர் ரவி தலைமையில் 20க்கும் மேற்பட்ட உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டினர். பின்னர் தமிழக காவல் துறையினர் மற்றும் ஆந்திர காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரை விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக ஐயப்பன் மற்றும் அவரது மனைவி பூமதி ஆகிய இரண்டு பேரையும் அங்கே காவலில் வைத்ததாக தெரிகிறது.
மேலும் அங்கு விடுவிக்கப்பட்ட எட்டு பேரில் ஆறு பேர் பலத்த காயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் வழக்கு பதிவு செய்த மத்தூர் போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான ஆந்திரா காவல் துறையினரை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குறவர் இன மக்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் கல்வித்தகுதிக்கேற்ப அரசு பனி வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கை துண்டான நிலையில் உயிரிழப்பு
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென புகுந்த மத்தூர் அருகேயுள்ள சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மேகநாதன் என்பவர் திடீரென கூட்டதில் நுழைந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் திமுக நிர்வாகியை சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் கெளதம் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் திமுக நிர்வாகியை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.
விவகாரம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன், பொறுப்பு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா உள்ளிட்டோர் இரு கட்சியினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பெயரில் திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.