Asianet News TamilAsianet News Tamil

பொள்ளாச்சியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி கை துண்டான நிலையில் உயிரிழப்பு

பொள்ளாச்சி கடைவீதியில் பட்டப் பகலில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் அன்றைய தினமே பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 persons killed road accident who did chain robbery in pollachi
Author
First Published Jul 25, 2023, 6:07 PM IST | Last Updated Jul 25, 2023, 6:07 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றனர். தீடீரென செயின் பறித்ததில் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

அப்பகுதி வியாபாரிகள் கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சி.சி.டி.வி காட்சி பதிவுகளைக் கொண்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தேனாறும், பாலாறும் தேவையில்லை; வெள்ள ஆறு ஓடாமல் இருந்தாலே போதும் - அதிமுக எம்எல்ஏ குமுறல்

இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்துள்ளனர். அப்போது நிலைத்தடுமாறி கொள்ளையர்களின் வாகனம் தடுப்புச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

கலப்பு திருமணம் செய்த பெண்ணை அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்ட சமூகத்தினர் தகராறு - கடலூரில் பரபரப்பு

இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios