- Home
- குற்றம்
- சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் விபத்து போல சித்தரிக்க உடலை கரூர் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்ற நிலையில், மனைவி போலீசில் சரணடைந்துள்ளார்.

கள்ளக்காதல்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் அரசமர விநாயகர் கோவில் வீதியில் வசித்து வந்தவர் ரத்தீஷ் (32). இவரது மனைவி இந்திராணி (26). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும் கரூரை சேர்ந்த தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த வினோத்குமார் (41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. வீட்டில் ரத்தீஷ் இல்லாத நேரம் பார்த்து வினோத்குமார் வந்து இந்திராணியுடன் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
கணவனை கொலை செய்ய ஸ்கெட்ச்
இந்த விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலம் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவர் ரத்தீஷை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் ரத்தீஷ் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திராணி, வினோத்குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து வீட்டிற்கு வரவழைத்தார்.
போலீஸ் விசாரணை
அதன்படி இந்திராணி, வினோத்குமார் சிலருடன் வீட்டிற்கு வந்து ரத்தீஷ் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொலை செய்தனர். பின்னர் நள்ளிரவில் கரூரில் இருந்து தனியார் ஆம்புலன்சை வரவழைத்து அதில் ரத்தீஷ் உடலை கரூர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் போட்டு ரயிலில் அடிப்பட்டது போல் உடலை போட்டுவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அடையாளம் தெரியாத சடலம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மனைவி காவல் நிலையத்தில் சரண்
இந்நிலையில் நேற்று முன்தினம் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் இந்திராணி நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. வினோத்குமாருக்கும் அவரது மனைவியின் தங்கை முறையான இந்திராணி கொழுந்தியாள் ஆவார். இந்திராணி வீட்டிற்கு, வினோத் அடிக்கடி வந்து செல்வது மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பேச்சை தவிர்க்க இருவரும் சித்தப்பா, மகள் என்று உறவு முறையை கூறி கள்ள உறவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

