
TNPL: சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி – ஜெகதீசன் அதிரடி 78 ரன்கள்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடரின் 14வது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கம் அணியின் வெற்றிக்கு நாராயண் ஜெகதீசனின் அதிரடி ஆட்டமும், ஸ்வாப்னில் சிங்கின் அதிரடி பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்தன.