
எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
ஜன நாயகன் என்ற அரசியல் விழிப்புணர்வு படத்தில் நடித்த இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார், தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்யாதது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழகத்தில் தேர்தல் நாள் என்றாலே அரசியல் மட்டுமல்ல, சினிமாவும் சேர்ந்து பேசப்படும் ஒரு தனி சூழல் உருவாகும். இந்த முறை அதையே உறுதிப்படுத்தும் விதமாக, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காரணம், அவர்கள் வாக்குச்சாவடியில் காணப்படவில்லை. இதற்குப் பின்னணி, ஜன நாயகன் படத்தில் அவர்கள் நடித்த சிறப்பு தோற்றங்களே.