
இளையராஜாவை சோதித்த அந்த பாட்டு! மணிக்கணக்கில் போராடிய இசைஞானி.!
பாடல் தொடங்கும்போதே அவர்கள் ஓடும் காலடிச் சத்தம் கேட்க வேண்டும் என ராஜா விரும்பினார். இதற்காகப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில், மைக் முன்னால் ஒருவரை நிற்க வைத்து, தரையில் நடப்பது போல சத்தம் எழுப்பச் சொன்னார்கள். ஆனால், அது எந்திரத்தனமாகவும், இரைச்சலாகவும் இருந்தது. இளையராஜா எதிர்பார்த்த அந்த 'இயல்பான தாளம்' அதில் கிடைக்கவில்லை. பல மணி நேரங்கள் கடந்தன. கிட்டத்தட்ட 8 மணி நேரத்திற்கும் மேலாகப் பல வித்தைகளைச் செய்து பார்த்தும் அந்த நுணுக்கமான சத்தம் திருப்தி அளிக்கவில்லை. அப்போதுதான் ஒரு ரசவாதம் நிகழ்ந்தது.