SPB செய்த மிஸ்டேக்.. ஒரே பாட்டில் ஸ்டாராகிய மலேசியா வாசுதேவன்...இந்த பாட்டுக்கு பின்னனி ?

Share this Video

எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாட வேண்டிய "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." பாடல், அவரது உடல்நிலை காரணமாக மலேசியா வாசுதேவனுக்குச் சென்று, அவரை ஒரு முன்னணிப் பாடகராகத் திரையுலகில் நிலைநிறுத்தியது. இது வாசுதேவனின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 1977-ஆம் ஆண்டு வெளியான பதினாறு வயதினிலே திரைப்படத்தின் மிகப் பிரபலமான பாடல் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு”. இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் இது. கமல்ஹாசன் (சப்பாணி), ஸ்ரீதேவி (மயில்), ரஜினிகாந்த் ஆகியோர் நடித்த இப்படம் தமிழ் சினிமாவை ஸ்டுடியோவுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்த மைல்கல். முழுக்க கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்ட முதல் படம் இதுதான்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video