தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு

Share this Video

இந்திய திரையுலகையும் தாண்டி ஹாலிவுட் வரை முத்திரை பதித்த நடிகர் தனுஷ், தனது ஜூலை 28 பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் மஞ்சக்காரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மேலும், இந்த விழாவில் நடிகர் தனுஷ் 150 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையையும், 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளாக 30 ஆட்டோக்களையும் வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் அறுசுவை விருந்து உபசரிக்கப்பட்டது.

Related Video