Published : Sep 21, 2022, 07:29 AM ISTUpdated : Sep 21, 2022, 10:05 PM IST

Tamil News live : ஆயுதபூஜை விடுமுறை... சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

சுருக்கம்

ஆயுதப் பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். மேலும் பிற ஊர்களில் இருந்து மற்றப் பகுதிகளுக்கு சுமார் 1,650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Tamil News live : ஆயுதபூஜை விடுமுறை... சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

10:05 PM (IST) Sep 21

எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!

அதிமுக முக்கிய நிர்வாகியும், சசிகலா, ஜெயலலிதா ஆகியோருக்கு முக்கியமானவருமான கோவை ராவணன் இன்று மாலை காலமானார்.

மேலும் படிக்க

09:31 PM (IST) Sep 21

பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும்.. தீர்மானிப்பவர்கள் மற்றவர்கள் அல்ல - சத்குரு ட்வீட்!

‘பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதை மதத்தினரோ, காழ்ப்புணர்ச்சியாளர்களோ தீர்மானிக்கக் கூடாது’ என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

08:50 PM (IST) Sep 21

அரசு பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்ட 140 மதுபான பெட்டிகள் - தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !

தமிழகத்தில் போதை மருந்துகளின் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இதன்மூலம் மாணவ சமுதாயம் சீரழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

08:27 PM (IST) Sep 21

அசால்ட்டாக பீர் குடித்த 8 வயது சிறுவன்.. வைரல் வீடியோவால் சிக்கிய உறவினர்.. இதுதான் காரணமா?

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார்.

மேலும் படிக்க

07:15 PM (IST) Sep 21

அதையே ஏன் சொல்றீங்க.. திருமாவளவனுக்கு தெரியாதா? ஆ. ராசாவுக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்மல்குமார்!

திராவிட கழக தலைவர் வீரமணியின் பாராட்டு விழாவில் திமுக எம்.பி ஆ.ராசா பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

06:38 PM (IST) Sep 21

“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு

நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமிச்ஷாவை  நேரில் சந்தித்து பேசினர்.

மேலும் படிக்க

06:17 PM (IST) Sep 21

ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?

ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக பதவியேற்று ஒரு வருடங்கள் ஆகிறது.

மேலும் படிக்க

06:12 PM (IST) Sep 21

TNPL தமிழ்நாடு நிறுவனத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

TNPL தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனம் ஆனது காலியாக உள்ள ஆறு பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க

05:03 PM (IST) Sep 21

நீங்கள் எஸ். சி தானே? ஆ.ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - வைரல் வீடியோ!

மேடையில் பெண்கள் அமர்வதற்கு உரிமை பெற்றுக் கொடுத்ததே திமுக தான். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த உன்னத மனிதர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க

04:47 PM (IST) Sep 21

மாமனிதன் வைகோ ஆவணப் படம் அனைத்து தரப்புகளின் வரவேற்பை பெற்றுள்ளது: துரை வைகோ

மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட "மாமனிதன் வைகோ" எனும் ஆவணப் படம் மதுரையில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. இந்த ஆவணப் படத்தை மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் பார்வையிட்டார். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதிமுகவினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் ஆவணப் படத்தை பார்வையிட்டனர்.மேலும் படிக்க

04:42 PM (IST) Sep 21

ஹேக்கர்களிடம் சிக்காமல் உங்கள் தனிப்பட்ட படங்கள், வீடியோக்களைப் பாதுகாப்பாக வைப்பது எப்படி?

டிஜிட்டல் உலகில் நமது போட்டோ, வீடியோ போன்ற தனிப்பட்ட டேட்டாவை பாதுகாப்பாக வைப்பது என்பது சவாலான விஷயம் தான்.

மேலும் படிக்க

04:36 PM (IST) Sep 21

சென்னை ஐஐடியில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம்..

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் படிக்க

04:02 PM (IST) Sep 21

துணை பொதுச்செயலாளர் பதவி யாருக்கு..? புதுக்கோட்டை விஜயாவிற்கு வாய்ப்பா..? ஓரங்கட்டப்படுகிறாரா கனிமொழி...?

சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த திமுக துணை பொது செயலாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  திமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளரான புதுக்கோட்டை விஜயா ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
 

மேலும் படிக்க...

03:58 PM (IST) Sep 21

சாத்தான்குளம் தந்தை மகனை காவலர்கள் தொடர்ச்சியாக கடுமையாக தாக்கினர்: தலைமை காவலர் சாட்சியம்!!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையில் தந்தை மகனை தொடர்ச்சியாக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாக தலைமை காவலர் சாட்சியம் அளித்ததை அடுத்து,  செப்டம்பர்  23ஆம்  தேதிக்கு அடுத்தகட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் படிக்க

03:48 PM (IST) Sep 21

ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!

முதலமைச்சர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் படிக்க

03:44 PM (IST) Sep 21

அடடே! வெறும் 5,850 ரூபாய்க்கு Redmi ஸ்மார்ட்போனா!!

இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கே பல நிறுவனங்கள் தயங்கும் நிலையில், ஷாவ்மி நிறுவனம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ரெட்மி ஸ்மார்ட்போனை வழங்கி வருகிறது.மேலும் படிக்க

03:37 PM (IST) Sep 21

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 .. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிப்பது..? விவரம் இங்கே

பிரபல முன்னணி தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் படிக்க

03:31 PM (IST) Sep 21

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

03:23 PM (IST) Sep 21

32 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீரில் திறக்கப்பட உள்ள திரையரங்கம்... முதல் படமே பொன்னியின் செல்வன் தான்

ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதை கருத்தில் கொண்டு, அங்கு மீண்டும் திரையரங்குகளை திறக்க உள்ளனர். ஐநாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து 3 திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 522 பேர் அமர்ந்து படம் பார்க்கக்கூடிய வகையில் இந்த திரையரங்குகள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் படிக்க

03:14 PM (IST) Sep 21

ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம்.. வைக்கலாமா, வேண்டாமா? சர்ச்சை கேள்விக்கு அதிரடி பதில்.!

தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுப்பதற்க்கான் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் 421 அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க

02:42 PM (IST) Sep 21

பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. இனி சிரமம் இல்லை.. சென்னை விமான நிலையத்தில் வரப்போகும் சூப்பர் வசதி

சென்னை விமானநிலையத்தில் பயணிகள், விமானங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக அதி நவீன நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.  இந்த நிரந்தர  இணைப்பு பாலம் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து பயணிகள் ஏறி இறங்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் படிக்க

02:30 PM (IST) Sep 21

தளபதிக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ நெக்ஸ்ட் ஷாருக்கான் படம்னு வேகமா உயர்ந்தாலும்..நிறைவேறாமல் உள்ள அட்லீயின் ‘அந்த’ ஆசை

இயக்குனர் அட்லீ இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

02:21 PM (IST) Sep 21

யார் இந்த சேடப்பட்டி முத்தையா...? அதிமுகவில் இருந்து திமுக வந்தது ஏன்..?

அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சேடப்பட்டி முத்தையா, கடந்த 2006 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலை மதுரையில் காலமானார்
 

மேலும் படிக்க...

01:35 PM (IST) Sep 21

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவருக்கு வயது 77. மதுரையில் தனியார் மருத்துவமனையில் 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.மேலும் படிக்க

01:09 PM (IST) Sep 21

தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை.. இன்று கடலோர மாவட்டங்களில் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

12:52 PM (IST) Sep 21

பரம்பிக்குளம் அணையின் மதகு உடைப்பு.. ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையின் ஒரு மதகு கழன்று விழந்ததால், அதிகளவில் தண்ணீர் வெளியேறி சாலக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:25 PM (IST) Sep 21

லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளதால், காட்ஃபாதர் படத்துக்கு தெலுங்கில் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இதன் எதிரொலியாக இப்படத்தின் பிசினஸும் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.57 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க

12:18 PM (IST) Sep 21

வேலுமணி வழக்கை அவசரமாக விசாரிங்க.. MP, MLA மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா?

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர்நீதிமன்ற எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

11:55 AM (IST) Sep 21

முன்னாள் எம்எல்ஏவை பாஜகவிற்கு தட்டி தூக்கிய அண்ணாமலை...! அலார்ட் ஆகும் அரசியல் கட்சிகள்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருண் சுப்பிரமணியன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார்.
 

மேலும் படிக்க..

11:42 AM (IST) Sep 21

தீபாவளி பண்டிகை அதிக வசூல் புகார்.. ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயம்.. எப்படி தெரிந்துக் கொள்ளுவது..?

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இதுக்குறித்து பயணிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசு சார்பில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

11:16 AM (IST) Sep 21

மக்களே கவனத்திற்கு !! இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்.. இதற்கெல்லாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க

10:59 AM (IST) Sep 21

திமுகவில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியேறியது ஏன்..? அடுத்தது யார்..? ஆர்.பி உதயகுமார் புதிய தகவல்

நீட் தேர்வை ரத்து செய்யும் யுக்திகள் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்த செய்து விடுவோம் என கூறிய திமுக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

மேலும் படிக்க...

10:54 AM (IST) Sep 21

விவேக் மட்டுமில்லைங்க... ரகுவரன் முதல் ரோஜா வரை கமலுடன் ஒருமுறை கூட நடிக்காத நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் கமலுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். ஆனால் 1980-90களில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்த சிலர் கமலுடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து பணியாற்றியதில்லை. அவர்கள் யார்.. யார்? மேலும் படிக்க

10:44 AM (IST) Sep 21

கவனத்திற்கு !! அரசு பேருந்துகளில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்..

தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.மேலும் படிக்க

10:43 AM (IST) Sep 21

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் அபிடவிட் எனப்படும் ஆதரவு உறுதிமொழி

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அபிடவிட் பெறும் நடவடிக்கையில் அதிமுக இறங்கியுள்ளது. இடைக்கால பொது செயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அபிடவிட் பெறப்படுகிறது. 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் அபிடவிட் பெறப்பட்டு வருகிறது. 

10:31 AM (IST) Sep 21

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு  மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுமேலும் படிக்க
 

10:15 AM (IST) Sep 21

நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் திடீர் ரெய்டு விட்ட வணிகவரித்துறை அதிகாரிகள்... பின்னணி என்ன?

நடிகர் சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் உணவு தயாரிப்புக்கான பொருட்கள் மொத்தமாக வாங்கும் கடைகளில் முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உரிய ஆவணங்கள் இன்றி பொருள்கள் வாங்கப்பட்டதாக வணிகவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரையில் உள்ள அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  மேலும் படிக்க

10:03 AM (IST) Sep 21

இம்மென்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்..! பாஜகவை கண்டு அஞ்சும் திமுக... இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி

 தமிழகம் முழுவதும் ஆ.ராசா பேச்சினை கண்டித்த பாஜகவினர் கைது செய்யப்படுவது திராவிடமுன்னேற்ற கழகம்,பாஜக வை கண்டு அஞ்சுவதை வெளிப்படுத்துகிறது என்பதோடு திமுகவின் ஹிந்துவிரோத போக்கை வெளிப்படுத்துகிறது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

09:28 AM (IST) Sep 21

பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்..? திமுகவின் சர்வாதிகாரத்தனத்திற்கு விரைவில் முடிவு- அண்ணாமலை ஆவேசம்

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு ஆ.ராசாவை  கைது செய்யாமல், இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

09:25 AM (IST) Sep 21

சிறுமி பாலியல் பலாத்காரம்! வெறி தீராததால் கொலை! வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன்,  ரூ. 25,000 அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மேலும் படிக்க