அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு !
பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகள் கனிமொழியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.
மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21 ஆம் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர். இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம்.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !
ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்யவும், மருத்துவ குழு அமைத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும், மகளின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுகுமார குருப் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவகல்லூரி முதல்வர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்னவென்றால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், துறை தலைவர், மயக்கவியல் துறை தலைவர் , மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை , சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும் அமைக்கப்பட்ட மருத்துவர்களின் உயர்மட்ட குழு பெண் இறப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு