சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு
ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். சட்டமன்றத் தேர்தலினுடைய தோல்விக்கு பிறகு தனக்கு ராஜசபா எம்பி வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு அந்த பதவியானது வழங்கப்படவில்லை.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !
சில நாட்களுக்கு முன்னால் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அப்போதே அவர் கலந்து கொள்ளாதது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. அவருடைய கணவர் ஜெகதீசனும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பல்வேறு விமர்சனங்களை திமுகவின் மீது வைத்து வந்தார். இது குறித்தும் சுப்புலட்சுமி ஜெகதீஷன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தது, கதிமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில்தான் அவர் சில நாட்களுக்கு முன்னதாகவே ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கிவிட்டதாக தற்போது அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பதவிக்கால முடிந்த எழுப்பினரே நான் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக முன்னாள் முதலமைச்சர் கலைஞரிடமே தெரிவித்துவிட்டேன்.
கலைஞருடைய மறைவிற்கு பிறகு. மு.க ஸ்டாலின் விருப்பத்தின் பேரில் கழகத்தின் வெற்றிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும், கழக பணியை மட்டும் செய்து வந்ததாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சரான மு க ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறார் எனவும் அவர் அறிக்கையில் பாராட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
மேலும் மன நிறைவோடு அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று முதலமைச்சரை நேரில் சென்று கட்சியில் இருந்து விலகுவதாக கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாகவே சுப்புலெட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகியுள்ளார் என்ற செய்தி திமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவியை அடுத்து யார் வகிக்க போகிறார்கள் என்பதே அனைவரது கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், திமுக நிகழ்ச்சிகளில் தலைவருக்கு நிகராக மேடையில் அமரும் பதவியான துணைப் பொதுச்செயலாளர் பதவியில் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இருந்துவருகிறார்கள்.
இதில் இருந்த ஒரே பெண் சுப்புலட்சுமி ஜெகதீசன் மட்டும்தான். தற்போது இந்த பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது. இதில் தற்போது சில பெயர்கள் அடிபடுகிறது. திமுகவின் மாநில மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி பெயரும், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பெயரும் அடிபடுகிறது.
அநேகமாக அந்த பதவி கனிமொழிக்கு கிடைக்கவே அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சற்று ஓரம் கட்டப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் திமுகவினருக்கு தெரிந்த முகம் என பல ப்ளஸ் பாயிண்ட்கள் இருப்பதால் அவரது பெயர் டிக் அடிக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?