சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் வசிக்கும் முதியோர்களுக்கு தமிழக அரசு மாதம்தோரும் ரூ.1000 வீதம் வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழி இல்லாமல் வசிக்கும் முதியவர்களின் துன்ப துயரத்தை போக்கும் வகையில், தமிழக அரசு செயல்படுத்தி வருகிற உன்னதமான திட்டம் தான் ‘தமிழ்நாடு அரசு முதியோர் உதவித்தொகை திட்டம்’.
மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களது ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். இவ்வாறாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இல்லாமல் வசிக்கும் முதியோர்களுக்கு தமிழக அரசு மாதம்தோரும் ரூ.1000 வீதம் வழங்கி அவர்களது துன்பத்தை நீக்கி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !
முதியோர் உதவித்தொகை திடீரென ரத்து செய்யப்பட இருப்பதாக, சமூக வலைதலங்களில் தகவல் வெளியானபடி உள்ளது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று செய்தயாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், 'யாராவது நமக்கு தீமை செய்தால் அந்த நபர் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.
தொகுதி மக்களுக்கு தாயுள்ளத்துடன் பணியாற்றுகிறேன். அரசு பள்ளியில் படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை அனைத்தும் மீண்டும் வழங்கப்படும். எனது தொகுதியில் கடந்த முறை நான் 38 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளேன். அனைவரது கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்