MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!

6 மணி நேரம்.. விடாத அதிகாரிகள்.. சிபிஐ முன் செந்தில் பாலாஜி சொன்ன 'அந்த' ரகசியம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 17 2026, 09:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்
Image Credit : Google

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்

கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். தமிழ்நாட்டில் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக பதிவான இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ 3 முறை விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையே கரூர் கூட்டத்தில் விஜய்' ''பத்து ரூபாய் பாலாஜி' என பாடத்தொடங்கியது பிறகுதான் அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அதன்பிறகே நெரிசல் ஏற்பட்டது என தவெகவினர் குற்றம்சாட்டினார்.

24
செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை
Image Credit : Asianet News

செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை

ஆகவே கரூர் கூட்ட நெரிசல் சம்பவ‌த்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் குளறுபடிகளும் காரணமாக இருக்கலாம் என விஜய் உள்ளிட்ட தவெகவினர் தெரிவித்தனர். இதனால் செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் அவர் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். இன்று காலை முதல் மாலை வரை சுமார் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்கள்.

Related Articles

Related image1
6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
Related image2
கரூரில் 41 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம்..! அமித்ஷா முன்னிலையில் பகீர் கிளப்பிய நயினார்
34
சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னென்ன?
Image Credit : Asianet News

சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விகள் என்னென்ன?

அப்போது கரூர் கூட்டத்தில் வரிசையாக ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? விஜய் பேசும்போது கூட்டத்தில் செருப்புகள் வீசப்பட்டது ஏன்? என தவெகவினர் செந்தில் பாலாஜி மீது வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதிகாரிகள் விடாமல் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் செந்தில் பாலாஜி விளக்கமாக பதில் அளித்தார்.

44
விஜய் மீது செந்தில் பாலாஜி புகார்
Image Credit : Asianet News

விஜய் மீது செந்தில் பாலாஜி புகார்

அப்போது கரூர் சம்பவத்துக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என சிபிஐ அதிகாரிகள் முன் செந்தில் பாலாஜி தெளிவுப்படுத்தி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் கரூர் நெரிசலுக்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம். காவல்துறையினர் வகுத்த பாதுகாப்பு விதிமுறைகளை விஜய் தரப்பு முறையாகப் பின்பற்றவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தவெக செய்து கொடுக்கவில்லை என விஜய் மீது செந்தில் பாலாஜி அடுக்கடுக்கான புகார்களை சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்
செந்தில் பாலாஜி
சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு)
அரசியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு வேட்பாளர் எத்தனை லட்சம் செலவு செய்யலாம்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ!
Recommended image2
Now Playing
உதகையில் ஆலங்கட்டியுடன் கொட்டி தீர்த்த கனமழை..! பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
Recommended image3
Now Playing
நோ கூட்டணி...சிங்கம் போல் சிங்கிளாக களமிறங்கும் தவெக - விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
Related Stories
Recommended image1
6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
Recommended image2
கரூரில் 41 பேர் மரணத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம்..! அமித்ஷா முன்னிலையில் பகீர் கிளப்பிய நயினார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved