“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரிசையாக கடும் பின்னடைவு தான் ஏற்பட்டு உள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளது. இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில், எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வரிசையாக கடும் பின்னடைவு தான் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் அப்செட்டில் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு..வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!
கடந்த வாரம் தேனியில் உள்ள தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு என்று மனமுறுக வழிபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ராமேஸ்வரம் வந்து அங்குள்ள ஒரு தனியார் மடத்தில் சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு ஹோமம் செய்தார். அங்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவிலின் வளாகத்தில் சிறப்பு ஹோமம் செய்து மூலவருக்கு ருத்ராபிஷேகம் செய்தனர். இந்த வழிபாடு பல ஜென்ம பாவங்களை போக்கும் என்றும், குடும்ப அபிவிருத்தியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து வாரணாசிக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது ஓபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். 3 நாட்கள் அவர் டெல்லியில் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது. அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் செல்ல உள்ளதாக தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?
டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் அவர் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 3 நாள் பயணமாக எடப்பாடி டெல்லிக்கு செல்கிறார்.
இந்த பயணத்தில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். டெல்லி தரப்பில் இருந்துதான் இந்த அழைப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கும் , மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசிக்கு செல்வதும் அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ரஜினி சொன்ன அந்த நம்பர்.. பணமதிப்பிழப்பு முதல் பிரதமர் வரை ; மோடிக்கும் 8 ஆம் நம்பருக்கு உள்ள ‘சீக்ரெட்’ !