அசால்ட்டாக பீர் குடித்த 8 வயது சிறுவன்.. வைரல் வீடியோவால் சிக்கிய உறவினர்.. இதுதான் காரணமா?
8 வயது சிறுவன் பீர் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் நெய்யாட்டிங்கரை பகுதியில் வசித்து வருபவர் மனு. இவரது அண்ணன் மகனான 8 வயது சிறுவனை அழைத்து கொண்டு ஓணம் பண்டிகை கொண்டாட அவர் வெளியே சென்றுள்ளார். இதன்பின்னர் அவர், மது கடை ஒன்றிற்கு சென்று பீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். வழக்கம் போல அவர்கள் மது அருந்த தொடங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?
அப்போது அருகில் இருந்த அண்ணன் மகன் ஆன அந்த சிறுவனிடம், பீரை கொடுத்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சிறுவனும் வேறு வழியின்றி அதனை வாங்கி குடித்து உள்ளான். இதனை மனு வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதன்பின்பு அந்த வீடியோவை வாட்ஸ்அப்பிலும் பகிர்ந்து உள்ளார்.இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு
இதனை சிறுவனின் பெற்றோர் பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். உடனடியாக அவர்கள் அருகே உள்ள நெய்யாட்டிங்கரை போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்து உள்ளனர். இதனை தொடர்ந்து அண்ணன் மகனான சிறுவனை பீர் குடிக்க கட்டாயப்படுத்தி அதனை வீடியோவும் எடுத்து பகிர்ந்த மனுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு