ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?
ஆளுநர் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக பதவியேற்று ஒரு வருடங்கள் ஆகிறது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல, தமிழ்நாடும் மத்திய அரசின் ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது. வழக்கமாக பாஜக ஆளாத மாநிலங்களில் என்ன செய்யுமோ ? அதைத்தான் இங்கும், அதாவது நம் தமிழ்நாட்டிலும் செய்து வருகிறது.
ஆளுங்கட்சி மீதான வெறுப்பு வளர்த்தல், பாஜகவை பேசுபொருளாக மாற்றுதல், ஆளுங்கட்சியின் அதிகாரத்தில் நுழைதல், இவைகள் மூலம் மாநிலத்தில் குழப்பத்தை விளைவித்தல் போன்றவை நடக்கும். ஆக மொத்தம் தமிழகத்திலும் அதே நிலை தான். திமுக Vs ஆளுநர் என்பதுதான் ஆளுநர் ஆர்.என் ரவி வந்தபிறகு அரசியல் வட்டாரங்களிலும் சரி, தமிழக்த்திலும் சரி நீட் முதல் துணைவேந்தர் நியமனம் வரை இந்த பிரச்னை தான்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பெற்று கொண்டார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர், இவர்தான் உளவு பார்க்க வந்திருக்கிறார் தெரியுமா, திமுகவுக்கு பிரச்னையை கொடுக்க சரியான ஆள் என்று திமுக,பாஜக ஆகிய இரண்டு வட்டாரங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, திராவிட கொள்கை, சனாதனம் என்று தொடர்ச்சியாக திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிராக பேசி வருவதை ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளதாக ஆளும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !
மாநிலத்தின் ஆளுநராக இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தமிழக பிரதிநிதியாகவே செயல்படுகிறார் என்று இன்றளவும் இவர்மேல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர். தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர் ஆர்.என் ரவி என்று கடுமையாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த திமுகவினர் ஆளுனர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி தரவும் மறக்கவில்லை.
காவல்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக அரசியல் கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டினார்கள். அதிமுக மற்றும் பாஜகவை தவிர்த்து ஏனைய கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இவ்வளவு சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் இருக்கும்போதும், அது குறித்து ஆளுநர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆளுநர் ரவியின் இந்த ஓராண்டு, சர்ச்சைகளும் மோதல்களுமாகவே கடந்துபோயிருக்கிறது. குறிப்பாக சனாதன மற்றும் இந்துத்துவா கொள்கைகளை மட்டுமே பேசி வருகிறார் என்றும் கூறுகிறார்கள். விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது. இதற்காக தமிழகத்தை நோக்கி இப்போதே மேலிட பாஜக காய் நகர்த்த துவங்கிவிட்டது என்பதற்கு முதல் காட்சி சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.சமீபத்தில் ஆளுநரை ராஜ்பவனில் ரஜினி திடீரென சந்தித்து பேசியிருந்தார்.அரசியல் காரணங்களுக்காக இந்த சந்திப்பு நடக்கவில்லை என்றார் ரஜினி.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, '30 நிமிடம் பேசினேன். அரசியல் விஷயமும் அவரிடம் பேசினேன். அவர் காஷ்மீரில் பிறந்து, வடமாநிலங்களிலேயே இருந்தவர். ஆனால், தமிழ்நாட்டை மிகவும் நேசித்துள்ளார். முக்கியமாக தமிழக மக்கள், அவர்களது நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துவிட்டது. இங்கே உள்ள ஆன்மீக உணர்வு அவர் மிகவும் நேசிக்கிறார்.
தமிழகத்தின் நல்லதுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று ஆளுநர் சொல்லி உள்ளார். தமிழக ஆன்மீக உணர்வு ஆளுநரை ஈர்த்துள்ளது’ என்று கூறினார். உளவுத் துறையில் பணிபுரிந்த அனுபவத்தால், தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நட்புறவு வளர்த்து கொண்டு, அவர்கள் மூலமும், பிற அதிகாரிகள் வாயிலாகவம் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை ஆளுநர் பெறுகிறார் என்றும், இது தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் சரியானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
மேலும், பாஜக ஆளாத மாநிலங்களில் வெவ்வேறான அரசியல் சூழல் நிலவுகிறது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில், அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் தலையிடுவது, கொள்கை சார்ந்த விஷயங்களில் எதிர்க் கருத்து தெரிவிப்பது என ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன என்றும் தெரிவிக்கிறார்கள்.
மேலும் செய்திகளுக்கு..ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!