நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் திடீர் ரெய்டு விட்ட வணிகவரித்துறை அதிகாரிகள்... பின்னணி என்ன?
மதுரையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகம் என சொல்லப்படும் உணவகங்கள் பல்வேறு இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஓட்டல்கள் நடத்தப்படுகிறது. மதுரையில் குறிப்பாக முக்கிய சந்திப்புகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வு லைன், நரிமேடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டல்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த ஓட்டல்களில் உணவு தயாரிப்புக்கான பொருட்கள் மொத்தமாக வாங்கும் கடைகளில் முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உரிய ஆவணங்கள் இன்றி பொருள்கள் வாங்கப்பட்டதாக வணிகவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுரையில் உள்ள அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்... 30 வருட நட்பு முறிந்ததா? பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? - மவுனம் கலைத்த மணிரத்னம்
சோதனையில் பொருட்கள் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக பொருட்கள் வாங்கியதில் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் பொருட்கள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது அம்மன் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு வணிகவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர் உடன் மட்டும் 26 படங்கள்... அந்த காலத்து ‘பான் இந்தியா’ நடிகை சரோஜா தேவியின் சுவாரஸ்யமான திரைப்பயணம்