சென்னை விமானநிலையத்தில் பயணிகள், விமானங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக அதி நவீன நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.  இந்த நிரந்தர  இணைப்பு பாலம் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து பயணிகள் ஏறி இறங்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

சென்னை விமானநிலையத்தில் பயணிகள், விமானங்களில் ஏறி இறங்குவதற்கு வசதியாக அதி நவீன நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிரந்தர இணைப்பு பாலம் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களில் இருந்து பயணிகள் ஏறி இறங்க முடியும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 110 விமானங்கள் நிற்கும் நிறுத்த மேடைகள் (Parking Bay) உள்ளன. அதில் முதல் 10 வரையில் விவிஐபிகளின் தனி விமானங்கள், மற்றும் சரக்கு விமானங்கள் நிற்பதற்கு பழைய விமான நிலையத்தில் அமைந்துள்ளது. சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையங்களில் உள்ள முதல் ஓடு பாதை, இரண்டாவது ஓடு பாதைகளில் மற்ற 100 நிறுத்த மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:யார் இந்த சேடப்பட்டி முத்தையா...? அதிமுகவில் இருந்து திமுக வந்தது ஏன்..?

அதில் 19 - 35 நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில், பயணிகள் விமானத்தில் இருந்து ஏறுவதற்கும் மற்றும் இறங்குவதற்கும் வசதியாக ஏரோ பிரிட்ஜ் உள்ளன. ஆனால் மற்றவை அனைத்து திறந்தவெளி நிறுத்த மேடைகளாக உள்ளன. எனவே இந்த வகை நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு லேடா் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. 

முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் இந்த நகரும் படிக்கட்டுகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த படிக்கட்டுகளால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தில் கூடுதல் ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:பள்ளியில் தலைமையாசிரியர் கழுத்தை பிடித்து தாக்குதல்.. திமுக கவுன்சிலரின் கணவர் அராஜகம்..!

தற்போது புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விமான நிலைய விரிவாக்க பணியில், 7 பிக்ஸ் லிங்க் பிரிட்ஜ்கள் எனப்படும், நிரந்தர இணைப்பு பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டிடத்தில் மூன்றும், இரண்டாவது கட்டிடத்தில் நான்கும் என்று 7 பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. 

தற்போது புதிதாக அமைக்கப்படும் நிரந்த இணைப்பு பாலங்களை (Multiple Aircraft Ramping System) ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் பயணிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஆனால் முன்னதாக பயன்படுத்தி வந்த ஏரோ பிரிட்ஜ்கள் இந்த வகை வசதி கிடையாது. இதனால் இந்த புதிய பாலத்தில் ஒரே நேரத்தில், அதிகமான பயணிகள் பயன்படுத்த முடியும். இதனால் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.