நீங்கள் எஸ். சி தானே? ஆ.ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி - வைரல் வீடியோ!

மேடையில் பெண்கள் அமர்வதற்கு உரிமை பெற்றுக் கொடுத்ததே திமுக தான். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த உன்னத மனிதர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.

You are sc tn minister ponmudi controversy speech video is viral

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புது நகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். 

அப்போது விழாவில் பேசிய அவர், ‘தமிழ்நாடு மு.க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களை மாதந்தோறும் சரியான நேரத்தில், சரியான எடையில் தரமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You are sc tn minister ponmudi controversy speech video is viral

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

குறிப்பாக நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாக வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் அவ்வப்பொழுது அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வு செய்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் தற்போது அனைத்து நியாய விலை கடைகளிலும் பொருட்கள் சரியான நேரத்தில் தரமாக உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக செய்த திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக முதல்வர் மு.க ஸ்டாலின் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அப்போது எடுத்துக்காட்டிற்காக மேடையில் இருந்த முகையூர் ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது நீங்கள் எஸ். சி தானே ? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் எழுந்து நின்று ஆமாம் சார் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

மேலும் செய்திகளுக்கு..ஆ.ராசா கண்டிக்கவில்லை என்றால் திமுக அதற்குரிய தண்டனையைப் பெறும்: ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை!!

You are sc tn minister ponmudi controversy speech video is viral

தொடர்ந்து பேசிய அவர், மேடையில் பெண்கள் அமர்வதற்கு உரிமை பெற்றுக் கொடுத்ததே திமுக தான். உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த உன்னத மனிதர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு வைரலாகி வருகிறது.  அமைச்சர் பொன்முடி, பெண்கள் சம உரிமை குறித்து பேசும் போது உதாரணத்திற்காக கூறிய விஷயத்தை எதிர்க்கட்சியினர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என திமுகவினர் பதிலளித்துள்ளனர்.

இந்நிலையில் இதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் பொன்முடி, ‘ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறது என்ற நல்லெண்ண அடிப்படையில்தான் பேசினேன். வேறு எந்த நோக்கத்திலும் யார் மனதும் புண்படும்படி நான் பேசவில்லை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சிலர் இதனை திரித்து கூறுகிறார்கள்’ என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios