சிறுமி பாலியல் பலாத்காரம்! வெறி தீராததால் கொலை! வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

8 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வடமாநில வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனையுடன்,  ரூ. 25,000 அபராதமும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

Girl raped and murdered.. North State teenager jailed till death

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி 2020ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மறுநாள் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

Girl raped and murdered.. North State teenager jailed till death

இந்த கொலை தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி கொலை தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம்அலி (21) என்பவரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

Girl raped and murdered.. North State teenager jailed till death
இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த மஜம்அலிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios