Asianet News TamilAsianet News Tamil

திமுகவில் இருந்து சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியேறியது ஏன்..? அடுத்தது யார்..? ஆர்.பி உதயகுமார் புதிய தகவல்

நீட் தேர்வை ரத்து செய்யும் யுக்திகள் எங்களிடம் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்த செய்து விடுவோம் என கூறிய திமுக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

RB Udayakumar has alleged that a closing ceremony has been held for AIADMK projects in the DMK regime
Author
First Published Sep 21, 2022, 10:57 AM IST

அதிமுக திட்டங்களுக்கு மூடு விழா

சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதி கொண்டலாம்பட்டியில், அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சிறந்த காவல்துறையாக இருந்த தமிழக காவல்துறை, தற்போது சட்டம் ஒழுங்கில் மோசமாக இருப்பதாக தெரிவித்தார். நாள் தோறும் கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் விமர்சித்தார்.  கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 2000 அம்மா மினி கிளினிக் திட்டத்தை தற்போது முழுமையாக மூடிவிட்டனர்.

RB Udayakumar has alleged that a closing ceremony has been held for AIADMK projects in the DMK regime

இதுபோன்று மகளிருக்கு இருசக்கர வாகனத்திற்கு மானியம் திட்டம், பட்டதாரி பெண்களின் திருமணத்தின் போது வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், ஏழை மக்கள் தரமான உணவருந்திட தொடங்கிய அம்மா உணவகம் திட்டம் என அனைத்தும் திமுக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். 2011 முன்பு முதியோர் உதவித்தொகை 1200 கோடி வழங்கினார்கள். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா 4500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ஒரே உத்தரவில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவிதொகை வழங்க உத்தரவிட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை திமுக அரசு குறைத்து வருவதாக குற்றம் சாட்டினார். 

இதற்காகத்தான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்..? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறும் புதுவித தகவல்

RB Udayakumar has alleged that a closing ceremony has been held for AIADMK projects in the DMK regime


சுப்புலெட்சுமி வெளியேறியது ஏன்..?

சுப்புலெட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுக ஆட்சியில் லஞ்சம் இல்லாத துறை இருந்தால் கூறுங்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  திமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால்தான் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளதாக தெரிவித்த அவர், அடுத்தடுத்து ஒவ்வொருவராக திமுகவில் இருந்து வெளியேற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  திமுக அரசை விமர்சித்தால் சோதனை நடத்துகின்றனர். எத்தனை வழக்கு போட்டாலும் சட்டப்படி சந்திப்போம். அதிமுக மனித புனிதரால் தொடங்கப்பட்ட, தெய்வசக்தி பெற்ற இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, எடப்பாடியாரை வழி நடத்துகிறது. திமுகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் எடப்பாடியாரால்தான் முடியும் என தெரிவித்தார்.

RB Udayakumar has alleged that a closing ceremony has been held for AIADMK projects in the DMK regime

சேலத்தை உலக அளவில் பேச வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் செய்யவேண்டிய திட்டங்களை எதிர்கட்சி தலைவராக இருந்து எடப்பாடி பழனிசாமி செய்துவருகிறார். டெல்லி சென்றவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நடந்தாய்வாழி காவேரி, காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு  தேர்தல் எப்போது வந்தாலும் இரட்டை இலைதான் வெற்றிபெறும் என ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இதையும் படியுங்கள்

இம்மென்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்..! பாஜகவை கண்டு அஞ்சும் திமுக... இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி

 

Follow Us:
Download App:
  • android
  • ios