MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • ஈரான் வைத்த செக்..! 48 மணி நேரத்தில் 3 போர்க்கப்பல்கள் அவுட்..! அமெரிக்காவின் பின்வாங்கல்!

ஈரான் வைத்த செக்..! 48 மணி நேரத்தில் 3 போர்க்கப்பல்கள் அவுட்..! அமெரிக்காவின் பின்வாங்கல்!

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராகச் செயல்படும் ஓமான் நாடு, இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.

2 Min read
Author : Thiraviya raj
| Updated : Mar 20 2026, 12:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு
Image Credit : x

யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் சமீபத்திய நகர்வுகள் உலக நாடுகளை புருவம் உயர்த்த வைத்துள்ளன. ஈரானை "இரண்டு நிமிடங்களில் அழிப்போம்" என்று அதிபர் டிரம்ப் முழங்கிய சில நாட்களிலேயே, அமெரிக்காவின் மூன்று முக்கிய போர்க்கப்பல்கள் திடீரென போர்க்களத்திலிருந்து அகற்றப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ஈரானை முற்றுகையிடுவதற்காக ஓமான் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல், திடீரென கிரீட் தீவில் உள்ள அமெரிக்க தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் இக்கப்பலில் ஏற்பட்ட மர்மத் தீ விபத்து மற்றும் சேதங்களே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் கண்ணிவெடிகளை முறியடிக்க நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் துல்சா மற்றும் யுஎஸ்எஸ் சாண்டா ஆகிய இரண்டு கப்பல்களும் திடீரென 3,500 கி.மீ தொலைவில் உள்ள மலேசியாவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

தற்போது மத்திய கிழக்கில் ஒரே ஒரு கண்ணிவெடி அகற்றும் கப்பல் மட்டுமே எஞ்சியுள்ளது. ஈரானின் கடல்வழி ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டிய நேரத்தில், அமெரிக்கா ஏன் தனது பலத்தைக் குறைத்துக் கொள்கிறது என்ற மர்மம் நீடிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஈரான் விரித்த வலை: சிக்கிக்கொண்ட டிரம்ப் நிர்வாகம்?
Image Credit : Getty

ஈரான் விரித்த வலை: சிக்கிக்கொண்ட டிரம்ப் நிர்வாகம்?

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நிலையை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூற்றுப்படி, "அமெரிக்கா ஈரானுடன் போரைத் தொடங்கிவிட்டு, இப்போது அதில் சிக்கித் தவிக்கிறது."

வெளியேற முடியாத சூழல்: ஒரு முறையான ஒப்பந்தம் இல்லாமல் அமெரிக்கா போரை நிறுத்தினால், அது சர்வதேச அளவில் அமெரிக்காவிற்குப் பெரும் அவமானத்தைத் தரும். தரைப்படை அச்சம்: ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் தரைப்படைகளை அனுப்ப வேண்டும். ஆனால், அது அமெரிக்க வீரர்களுக்குப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் டிரம்ப் தயங்குகிறார்.

ஈரான் இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அமெரிக்காவை ஒரு நீண்ட காலப் போருக்குள் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதற்குப் பதிலடியாக ஈரான் காக்கும் 'மௌனம்' இன்னும் ஆபத்தானது எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

34
 ஓமானின் எச்சரிக்கை: யாருக்கும் வெற்றியற்ற போர்!
Image Credit : Getty

ஓமானின் எச்சரிக்கை: யாருக்கும் வெற்றியற்ற போர்!

மத்திய கிழக்கின் அமைதித் தூதுவராகச் செயல்படும் ஓமான் நாடு, இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஓமான் வெளியுறவு அமைச்சர் அல்-புசைதி கூறுகையில், "இந்தப் போரில் யாரும் வெற்றி பெறப் போவதில்லை; மாறாக இது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் சீரழிக்கும்" என எச்சரித்துள்ளார்.

44
மிரட்டலா? சரணாகதியா?
Image Credit : x.com/INDOPACOM

மிரட்டலா? சரணாகதியா?

"2 நிமிடங்களில் அழிப்பேன்" என்ற டிரம்பின் ஆக்ரோஷமான பேச்சிற்கும், போர்க்கப்பல்கள் அமைதியாகத் திரும்பப் பெறப்படுவதற்கும் இடையில் ஏதோ ஒரு ரகசிய அரசியல் நகர்வு ஒளிந்திருக்கிறது. சேதமடைந்த கப்பல்களைச் சீரமைக்கவா அல்லது ஈரானின் பிடியில் இருந்து கௌரவமாக வெளியேறவா இந்த பின்வாங்கல்? ஈரான் விரித்த வலையில் அமெரிக்கா சிக்கியதா அல்லது அடுத்த பெரிய தாக்குதலுக்கான வியூகமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

About the Author

TR
Thiraviya raj
உலகப் போர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Modi : இத்தாலி பிரதமருக்கு 'மெலடி' சாக்லேட் கொடுத்த மோடி... இணையத்தில் வைரலாகும் க்யூட் மொமண்ட்!
Recommended image2
Alien Life Research : டைனோசர் முட்டை.. நாசா மிஷனில் பெரிய திருப்பம்... ஆடிப்போன விஞ்ஞானிகள்
Recommended image3
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved