இம்மென்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்..! பாஜகவை கண்டு அஞ்சும் திமுக... இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி

 தமிழகம் முழுவதும் ஆ.ராசா பேச்சினை கண்டித்த பாஜகவினர் கைது செய்யப்படுவது திராவிடமுன்னேற்ற கழகம்,பாஜக வை கண்டு அஞ்சுவதை வெளிப்படுத்துகிறது என்பதோடு திமுகவின் ஹிந்துவிரோத போக்கை வெளிப்படுத்துகிறது என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Narayanan Thirupaty has said that DMK is afraid of BJP

ஆ ராசாவிற்கு மிரட்டல்

மனு சாஸ்திரத்தில் கூறியுள்ளதாக கூறி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என கேட்டிருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னனி அமைப்புகள் கடும் கண்டத்தை தெரிவித்து ஆ.ராசாவை கைது செய்ய கோரி காவல்நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து இரு தினங்களுக்கு முன் கோவையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி  " தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார் " என ஆ.ராசா மற்றும் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தும் சில கடுமையான வார்த்தைகளையும் பயன்படுத்தி இருந்தார்.

இதற்காகத்தான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்..? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறும் புதுவித தகவல்

Narayanan Thirupaty has said that DMK is afraid of BJP

பாஜகவை கண்டு அஞ்சும் திமுக

இதனையடுத்து இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலாஜி உத்தம ராமசாமியை இன்று காலை கைது செய்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பாலாஜி உத்தம ராமசாமியை 15 நாட்கள் ரிமான்ட் செய்யப்பட்டார். இதற்க்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

 

பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையிலும் தரக்குறைவாக பேசி  மக்களின் உணர்வுகளை புண்படுத்திய ஆ.ராசாவின் மீது நடவடிக்கை எடுக்காமல் தவறை தட்டி கேட்டவரை கைது செய்வது அடக்குமுறை ஆட்சியின் அவலமே. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆ.ராசா பேச்சினை கண்டித்த பல்வேறு பாஜகவினர் கைது செய்யப்படுவது திராவிடமுன்னேற்ற கழகம்,பாஜக வை கண்டு அஞ்சுவதை வெளிப்படுத்துகிறது என்பதோடு திமுகவின் ஹிந்துவிரோத போக்கை வெளிப்படுத்துகிறது.

போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காலை வைத்து பாருடா நாயே.. ஆ.ராசாவை மிரட்டிய பாஜக மாவட்ட தலைவர் கைது.!

Narayanan Thirupaty has said that DMK is afraid of BJP

பாஜக தொடர்ந்து போராடும்

'இம்மென்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்' என்ற ரீதியில், தமிழகம் முழுவதும் தி மு க அரசின் குறைகளை சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கும் பாஜகவினரை கைது செய்து சிறையிலடைப்பது தொடர்கதையாகி வருவது மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல். ஆனால், திமுக வின் இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் அராஜக, அடக்குமுறை ஆட்சி நடத்தும் தமிழக அரசின் முறைகேடுகளை, நிர்வாக சீர்கேட்டை எதிர்த்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக தொடர்ந்து போராடும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்..? திமுகவின் சர்வாதிகாரத்தனத்திற்கு விரைவில் முடிவு- அண்ணாமலை ஆவேசம்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios