விவேக் மட்டுமில்லைங்க... ரகுவரன் முதல் ரோஜா வரை கமலுடன் ஒருமுறை கூட நடிக்காத நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கமலுடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து பணியாற்றாத நடிகர், நடிகைகள் பற்றிய விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் கமல்ஹாசன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வரும் கமலுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புவர். ஆனால் 1980-90களில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்த சிலர் கமலுடன் ஒரு படத்தில் கூட சேர்ந்து பணியாற்றியதில்லை. அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரகுவரன்
90ஸ் கிட்ஸின் பேவரைட் வில்லன் என்றால் ரகுவரன் தான். 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் சக்சஸ்புல் ஹீரோவாகவும், வில்லனாகவும் பயணித்த ரகுவரன், ரஜினி, விஜய், அஜித் போன்ற பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். ஆனால் கமலுடன் மட்டும் அவர் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடித்ததில்லை.
நதியா
நடிகை நதியா, 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரஜினியுடன் சேர்ந்து பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த நதியா, இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. சமீபத்தில் கூட பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நதியா நடிக்க உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதுவும் கைகூடவில்லை.
நக்மா
நடிகை நக்மாவும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான். இவர் ரஜினியுடன் சேர்ந்து பாட்ஷா படத்தில் நடித்திருந்தார். ஆனால் கமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. தற்போது நக்மா அரசியலில் இறங்கிவிட்டதால் இனியும் இந்த கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்று தான் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்களில் திடீர் ரெய்டு விட்ட வணிகவரித்துறை அதிகாரிகள்... பின்னணி என்ன?
கனகா
1980-களில் தமிழ் திரையுலகில் டிரெண்டிங் நடிகையாக வலம் வந்தவர் கனகா, குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கனகா அப்போதைய டாப் ஹீரோக்களான ரஜினி, ராமராஜன் ஆகியோருடன் பணியாற்றி இருந்தாலும், கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர்ந்து நடித்ததில்லை.
ரோஜா
நடிகை ரோஜாவும் இதுவரை கமலுடன் இணைந்து பணியாற்றியதே இல்லை. இவர் தற்போது அரசியலில் இறங்கிவிட்டதால் இனியும் இந்த கூட்டணி இணைய வாய்ப்பில்லை. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக்
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக், விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருந்தாலும் கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை என பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவரது ஆசை இந்தியன் 2 படம் மூலம் நிறைவேறியது. ஆனால் அப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் அவர் இறந்துவிட்டதால், அவர் நடித்த காட்சிகளை தூக்கிவிட்டு தற்போது வேறு நடிகரை அதில் நடிக்க வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... 'ஆஸ்கர் விருதுக்கு' பரிசீலிக்கப்பட்டு 13 இந்திய படங்கள் எவை? தமிழில் எந்த படம் பார்க்கப்பட்டது தெரியுமா...?