'ஆஸ்கர் விருதுக்கு' பரிசீலிக்கப்பட்டு 13 இந்திய படங்கள் எவை? தமிழில் எந்த படம் பார்க்கப்பட்டது தெரியுமா...?

ஆஸ்கர் விருது தேர்வுக்கான இந்திய திரைப்பட அறிவிப்பு சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எத்தனை படங்கள் தேர்வுக்குழுவால் பார்க்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Which 13 Indian films were considered for 'Oscars'? Do you know which movie was watched in Tamil

95வது ஆஸ்கர் விருதுக்காக, இந்திய சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கும் விதமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பினில் இந்திய  திரைப்பட சங்கத்தின்  தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர்.

இந்த தேர்வுக்குழுவினில்  இதன் தலைவர் டி.எஸ். நாகபரணா, கமலேஸ்வர் முகர்ஜி , ராஜேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பல்வேறு மொத்தம் 19 பேர் கலந்து கொண்டு, ஆஸ்கருக்கு செல்ல உள்ள படத்தை பரீசீலித்தனர். இதை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா , "இந்திய சார்பில் வருடர்த்திற்கு 4000,  5000 படங்கள் எடுக்கப்படுகிறது.  மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை மாறியுள்ளது. ஆஸ்கருக்கு  இந்தியாவில் இருந்து தரமான படங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் தேர்தெடுக்கப்பட்ட படத்தினை தலைவர் அறிவிப்பார் என்றார்". 

Which 13 Indian films were considered for 'Oscars'? Do you know which movie was watched in Tamil

இவரை தொடர்ந்து பேசிய தலைவர் நாகாபரணா, இங்கு இந்த விழாவில் பங்கு கொண்து மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக  இருக்கிறது. ஆஸ்கர்  விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது.  பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது.  இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.  

ஆஸ்கார் நுழைவுக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்  13 படங்கள்.

இந்தி-6 
01-பதாய் தோ 
02-ராக்கெட்ரி 
03-ஜுண்ட் 
04-பிரம்மாஸ்திரம் 
05-தி காஷ்மீர் ஃபைல்ஸ் 
06-அனெக் 

திமாசா (அசாம்)-1
செம்கோர் 

தமிழ்-1 
இரவின் நிழல் 

Which 13 Indian films were considered for 'Oscars'? Do you know which movie was watched in Tamil

குஜராத்தி-1 
செலோ ஷோ

தெலுங்கு-2 
ஆர்ஆர்ஆர் 
ஸ்தலம் 

மலையாளம்-1 
அரியுப்பு 

பெங்காலி-1 
அபராஜிதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios