எடப்பாடி, வேலுமணியை உருவாக்கியவர்..கொங்கு மண்டலத்தின் பவர் சென்டர் மறைவு - யார் இந்த ராவணன்!
அதிமுக முக்கிய நிர்வாகியும், சசிகலா, ஜெயலலிதா ஆகியோருக்கு முக்கியமானவருமான கோவை ராவணன் இன்று மாலை காலமானார்.
சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன் தான் இந்த ராவணன். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
தம்பி திவாகரனின் ஆலோசனைகளை கேட்டு நடந்து வந்த சசிகலா ஒரு கட்டத்தில் அனைத்திற்குமே ராவணனைக் கேட்டு நடக்க ஆரம்பித்தார். 2003-04-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் என அனைத்தையும் நடத்தியவர் ராவணன் தான்.
கொங்கு மண்டல அதிமுகவை மட்டுமல்லாமல் கோடநாடு எஸ்டேட்டையும், மிடாஸ் மதுபான தொழிற்சாலையையும் இவரே நிர்வகித்து வந்தார் என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு கோவை, திருச்சி சாலையில் ராமநாதபுரம் ஐயர் ஆஸ்பத்திரி எதிரே சின்ன பங்களா உள்ளது. அதில் 1996-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார். இங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் உள்ள சுங்கம் பை-பாஸ் சாலையின் இடதுபுறம் ஒதுக்குப்புறமாக ஒரு குடோன் உண்டு.
மேலும் செய்திகளுக்கு..சுப்புலட்சுமி ஜெகதீசன் பதவிக்கு போட்டியிடும் ‘இருவர்’.. கனிமொழியா? உதயநிதியா? ஸ்டாலின் போடும் புது கணக்கு
இந்த குடோனில் ஆரம்பத்தில் ஒரு ஆயில் கம்பெனி நடந்து வந்தது. அது பின்னர் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒட்டுமொத்த கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வந்து செல்லும் இடமாக மாறிப் போனது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர், சில நாட்கள் மட்டும் இங்கு வருவார்கள். வந்த சுவடு தெரியாமல் சில மணி நேரங்களில் சென்றுவிடுவார்கள்.
அவர்கள் அப்போது சந்தித்ததெல்லாம் ராவணனைத்தான் என பேசப்படுவதுண்டு. 2003-04-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டல அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம், மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர்களுக்கான ரகசிய நேர்காணல் எல்லாம் இங்கேதான் நடந்தது. 2004 மக்களவைத் தேர்தல் தோல்வி, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியிழப்புக்கு பிறகு அதிமுகவில் கட்சிக்குள்ளேயே பெரும் சரிவு ஏற்பட்டது.
அப்போது புதிது புதிதாக கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கொங்கு மண்டலத்தில் இடம் பிடித்தவர்கள் எல்லாம் ராவணனால் தேர்வு செய்யப்பட்டவர்களே என்றனர் அதிமுகவினர். அதேநேரம் ராவணன் மீது பல புகார்கள் கட்சி தலைமைக்கும் சென்றன.
அதன் உச்சகட்டமாக ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை கடத்திச்சென்று பல நாட்கள் ஓர் அறையில் அடைத்து மிரட்டி, அவரது நிலங்களை அபகரித்துக் கொண்டதாக போலீஸில் புகார் ஆகி, அதில் ராவணன் தலைமறைவான சம்பவமும் பத்திரிகைகளில் செய்திகளாயின. ஆனால் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் தேர்வில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தார்.
மேலும் செய்திகளுக்கு..ஓர் ஆண்டில் சாதனைகளும், சர்ச்சைகளும்.. ஆளுநர் ஆர்.என் ரவியின் 1 வருட செயல்பாடு எப்படி?
அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீஸில் சிக்க, அதில் ராவணனும் கைதானார். சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் சசிகலா கார்டனில் திரும்ப அழைக்கப்பட்டு, இவர்கள் மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ராவணனும் விடுதலையானார். அதன் பிறகு பல்வேறு இடங்களில், பல்வேறு முறைகளில் சசிகலா உறவுகள் அதிமுக அரசியலுக்குள் திரைமறைவில் புகுந்து வெளிப்பட்டாலும், ராவணன் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.
பெங்களூரு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றால் யாரை முதல்வர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்தபோது ராவணனை ஆக்கலாம் என்று சசிகலா குடும்பம் முடிவு செய்திருந்தது. அதன் பிறகு சசிகலா குடும்பத்தினர் மீது பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீஸில் சிக்க, அதில் ராவணனும் கைதானார். சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பின்னர் மன்னிப்பு கேட்டதால் சசிகலா கார்டனில் திரும்ப அழைக்கப்பட்டு, இவர்கள் மீதான நெருக்கடிகள் தளர்த்தப்பட்டன. ராவணனும் விடுதலையானார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பிச்சைக்கண்ணு வாண்டையார் மகனான ராவணனுக்கு ஒரே மகன் அரவிந்த்.
இவர் திருச்சியில் மருத்துவ உயர்கல்வி பயின்று வருகிறார். அவருடன் தங்கி இருந்த நிலையில் திடீரென இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டு ராவணன் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் திருவாரூரில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“டெல்லி கொடுத்த சிக்னல்.. எடப்பாடி டீம் எடுத்த அதிரடி முடிவு” - அதிமுகவில் பரபரப்பு